சில பேர் வாழக்கையை
வாழ்ந்து பார்க்கிறார்கள்
சில பேர் வாழக்கையை
வேடிக்கை பார்க்கிறார்கள்..
சில பேர் அதனை
விமர்சித்து பார்க்கிறார்கள்….
ஆனால் எல்லோரையும் கடக்கிறது
வாழக்கை எனும் மேகம்…
சிலரது வாழ்க்கையோ மிகச் சுலபமாக
அவரவர் கண்முன்னே கண்ணீராய்
கரைந்து போகிறது
ஏதோ ஒரு வார்த்தை ஏற்படுத்திய
வலியினால்……..!!!