தாயில்லாத பிள்ளை இருக்கலாம்
தகப்பன் இல்லாத மகன் கூட இருக்கலாம்
யாரும் அற்ற அனாதையாய் கூட இருக்கலாம்
அனால் நட்பில்லா உறவு
புவி இங்கு காணோம்!
எத்தனை துரோகங்கள் முதுகில் குத்தப்பட்டாலும்…..
அவமானம் முகத்தில் காரி துப்பினாலும்……
மாறாத ரணங்களை சில வார்த்தை ஏற்படுத்தி இருந்தாலும்……
வாழ்க்கையோ வானாந்திரம் போல இருந்தாலும்,
எது எப்படி இருந்தாலும்….
நாம் இணைந்து பருகும் ஒரு ஒற்றை தேனீர், இதுவும் கடந்து போகும் என்பதை சொல்லாமல் சொல்லி விட்டு
போகும் பொழுதுகளில் உணர்தேன் நம் நட்பின் ஆழத்தை!!!