Follow Us On

பாலியல் சமத்துவம்

மத்துவம் அல்லது பாகுபாடு காட்டாதது என்பது ஒவ்வொரு நபருக்கும் சமமான வாய்ப்புகளையும் உரிமைகளையும் ஆண் பெண் வேறுபாடின்றி பெறும் நிலையே ஆகும். சமூகத்தில் உள்ள ஒவ்வொரு நபரும் தமக்கும் அனைத்திலும் சம அந்தஸ்து வாய்ப்பு மற்றும் உரிமைகளை பெற வேண்டும் என்ற தவிப்புடன் இருக்கின்றனர். மனிதர்களிடையே நிறைய பாகுபாடு உள்ளது என்பது பொதுவான கணிப்பீடாகும். கலாச்சார வேறுபாடு, புவியியல் வேறுபாடு, மற்றும் பாலினம் ஆகியவற்றின் காரணமாக பாகுபாடு நிலவுகிறது. பாலினத்தை அடிப்படையாகக் கொண்ட சமத்துவமின்மை என்பது முழு உலகிற்கும் சவாலான விடயமாகும் இவ்வாறான பாகுபாடே பிளவுகளை உருவாக்கும் ஒரு சமூக அச்சுறுத்தலாகும்.பாலின சமத்துவம் என்பது மனித உரிமை. இது ஒரு அமைதியான மற்றும் நிலையான உலகத்திற்கு தேவையான அடித்தளமாக உள்ளது, மேலும் பாலின சமத்துவத்தை முன்னேற்றுவது என்பது ஆரோக்கியமான சமூகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் முக்கியமானதொன்றாகும். மேற்கூறப்பட்டவைகளை  அடிப்படையாக வைத்து நோக்கும்போது பாலின சமத்துவம் என்பது அரசியல், பொருளாதார, கல்வி,மற்றும் சுகாதார அம்சங்களில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம வாய்ப்புகளை வழங்குவதாகும்.

இவ்வாறான பாலியல் சமத்துவம் என்பது முக்கியத்துவமாக காணப்படுகின்றது யாதெனில்;ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம வாய்ப்புகள் கிடைக்கும்போதுதான் ஒரு தேசம் முன்னேறி உயர்  வளர்ச்சியை அடைந்து கொள்ள முடியும். சமுதாயத்தில் பெண்கள் பெரும்பாலும்  சம்பளம் பெறுவதின் அடிப்படையில், உடல்நலம், கல்விச் செயற்பாடுகளில், பிரச்சினைகளுக்கு தீர்வு முன்வைப்பவைகளில் மற்றும் பொருளாதார சுதந்திரம் ஆகியவற்றிற்கு ஆண்கள் பெற்றுக்கொள்ளும் உரிமைகளைப் போன்று சம உரிமைகளைப் பெறுவதைப் பெண்கள்  தவிர்க்கிறார்கள.இவ்வாறு பெண்கள் என்பவர்கள் குடும்பத்தின் பராமரிப்பாளர்களாகவும்.  பெண்கள் பெரும்பாலும் வீட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுகிறவர்களாகவும். உயர்கல்வியைத் தொடர்வதிலோ, பிரச்சினைகளுக்கான தீர்வினை மேற்கொள்ளும் பாத்திரங்களாக மற்றும் தலைமைப் பாத்திரங்களில்  பங்களிப்பை மேற்கொள்வது என்பதில் பெண்களின் முனைப்பு குறைவாக உள்ள சமூக அமைப்பும் நிலவுகிறது. இந்த பாலின ஏற்றத்தாழ்வு ஒரு நாட்டின் வளர்ச்சி விகிதத்தில் ஒரு தடையாகும். பெண்கள் தொழிலாளர் தொகுப்பில் பங்கேற்கும்போது நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் அதிகரிக்கிறது. பாலின சமத்துவம் பொருளாதார செழிப்புடன் தேசத்தின் ஒட்டுமொத்த நல்வாழ்வையும் அதிகரித்ததாக மாற்றம் பெறும்.

ஒவ்வொரு பிரச்சனைகளையும் அதற்கான தீர்வுகளைக் காண அதற்கான அளவிடுகள் முன்வைக்கப்பட்டு அவை தீர்க்கப்படும் அவ்வாறே பாலின சமத்துவமும் கணிப்பிட எவ்வாறு  அளவிடப்படுகின்றதெனில்;ஒரு நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியை தீர்மானிக்க பாலின சமத்துவம் ஒரு முக்கிய காரணியாகும். பாலின சமத்துவத்தை அளவிட பல குறியீடுகள் உள்ளன.

பாலின தொடர்பான மேம்பாட்டு அட்டவணை (ஜி.டி.ஐ) – ஜி.டி.ஐ என்பது மனித மேம்பாட்டு குறியீட்டின் பாலின மைய அளவீடு ஆகும். ஒரு நாட்டின் பாலின சமத்துவத்தை மதிப்பிடுவதில் ஆயுட்காலம், கல்வி மற்றும் வருமானம் போன்ற அளவுருக்களை ஜி.டி.ஐ கொண்டிருக்கின்றது.

பாலின வலுவூட்டல் அளவீடு (ஜி.இ.எம்) – தேசிய பாராளுமன்றத்தில் பெண் வேட்பாளர்கள்  காணப்படும் விகிதம், பொருளாதார முடிவெடுக்கும் பாத்திரத்தில் பெண்களின் சதவீதம், பெண் ஊழியர்களின் வருமான பங்கு போன்ற விரிவான அம்சங்களை இந்த அளவீடு உள்ளடக்கியுள்ளது.

பாலின சமபங்கு அட்டவணை (GEI) – பாலின சமத்துவமின்மையின் மூன்று அளவுருக்கள் மீது GEI நாடுகளை வரிசைப்படுத்துகிறது, அவை கல்வி, பொருளாதார பங்கேற்பு மற்றும் அதிகாரமளித்தல் என்ற மூன்று அளவுருக்களாகும். இருப்பினும், GEI சுகாதார அளவுருவை புறக்கணித்ததாக செயற்படுகிறது.

உலகளாவிய பாலின இடைவெளி அட்டவணையை உலக பொருளாதார மன்றம் 2006 இல் உலகளாவிய பாலின இடைவெளி குறியீட்டை அறிமுகப்படுத்தியது. இந்த குறியீடானது பெண்கள் சமூகப் பங்கேற்பு அளவை அடையாளம் காண்பதில் அதிக கவனம் செலுத்துகிறது. பொருளாதார பங்களிப்பு, கல்வி பெறுதல், சமூகத்தில் பெறும் வாய்ப்புக்கள்,  அரசியல் அதிகாரமளித்தல், சுகாதாரம் மற்றும் உயிர்வாழும் வீதம் ஆகியவை அளவீட்டில் கருத்தில் கொண்ட  முக்கியமான பகுதிகளாகும்.இவ்வாறு பாலின சமத்துவம் மேற்கூறப்பட்ட அளவீடுகளைக் கொண்டு அளவிடப்படுகின்றது.

இப் பாலியல் சமத்துவமானது எல்லா நாடுகளிலும் பூரணத்துவம் பெற்றதாக இல்லை நாட்டுக்கு நாடு வேறுபட்டுச் செல்கின்றது இலங்கையை எடுத்துக் கொண்டால் ;இலங்கையில் நிலையான அபிவிருத்திக்கான 2030 நிகழ்ச்சி நிரலை அடைவதற்கு ஒன்பது ஆண்டுகள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், ஒவ்வொரு நபருக்கும்  கல்வி, சுகாதாரம், ஒழுக்கமான வேலை, பாகுபாடு மற்றும் துஷ்பிரயோகம் இல்லாத வாழ்க்கை முறை, அரசியல் மற்றும் பொருளாதார முடிவெடுப்பதில் பிரதிநிதித்துவப்படல் ஆகியவற்றுக்கு சமமான அணுகல் இருப்பதை உறுதி செய்து கொள்வது மிக முக்கியமாகும்.  

எனவே பாலின சமத்துவத்தை அடைவதில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளபோதிலும், பாலின சமத்துவத்தை  நிலைநிறுத்தும் கட்டமைப்புக்கள், தடைகள் மற்றும் சமூக விதிமுறைகளையும் எதிர்கொண்டு, பல பெண்கள் பாகுபாடிற்க்குட்பட்டு  வன்முறையை அனுபவிக்கின்றனர். இவற்றிற்க்கு பின்வருவனவற்றை எடுத்துக் காட்டாக குறிப்பிடலாம்.

8.6 மில்லியன்  பொருளாதார அதிக ஈடுபாட்டில், 64% ஆண்களுக்கு , 35% பெண்களாகவே காணப்படுகின்றனர்,இலங்கையின் மக்கள் தொகையில் 52% பெண்களாக காணப்படுகின்றனர் ஆனால் பாராளுமன்றத்தில் பெண் பிரதிநிதித்துவம் 5.3% மட்டுமே. 2017 ஆம் ஆண்டு நிலவரப்படி பெண்களின் தொழிலாளர்

பங்களிப்பு மொத்த மக்கள் தொகையில் 36.6% ஆகும். ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் (யு.என்.எஃப்.பி.ஏ) 2019 இல் நடத்திய ஆய்வின் முடிவுகளின்படி, இலங்கை பெண்கள் மற்றும் சிறுமிகளில் 90% பெண்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது பொது பேருந்துகள் மற்றும் ரயில்களில் பாலியல் துன்புறுத்தல்களை எதிர்கொண்டுள்ளனர் என்று கூறுகின்றது.

அவ்வாறே இந்தியாவை எடுத்துக்கொண்டால் பாலின சமத்துவமின்மை என்ற காரணத்தினாலும் பல பிரச்சனைகளும் போராட்டங்களும் அங்கு நிலவுகின்றது. துஷ்பிரயோகங்கள் என்பது அடுக்கடுக்காய் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது அதற்கு பல காரணங்கள் குறிப்பிட்ட போதிலும் பாலின சமத்துவமின்மை என்பது ஒரு முக்கிய காரணியாக கருதப்படுகின்றது.

 இவ்வாறு பாலியல் சமத்துவமின்மையினால் உலக நாடுகள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்ட போதிலும் இதற்கான தீர்வுகள் என்பது மனித சமூகத்தில் மனிதர்கள் இடத்திலேயே உருவாக்கப்பட்டால்தான் நாடும் சமூகமும் சீர்பெற்ற அமையும். அதாவதுகுடும்பம் என்பது ஒரு சமூகத்தை கட்டமைப்பதில் அடித்தளமான அஸ்திவாரமாக காணப்படுகின்றது இங்கிருந்துதான் இதற்கான சிறந்த தீர்வுகளை உருவாக்கிக் கொள்ள முடியும் அதாவது ஒரு குடும்பத்தில் ஆண் பெண் உறுப்பினர்கள் இருவரும் ஒரே மாதிரியாக நடத்தப்படும்போதுதான் பாலியல் சமத்துவம் என்பது வளரவும் அது தொடர்பாக கற்றுக்கொள்ளவும் சிறந்த பெறுமதியை கொண்டமைப்பதற்கான ஒரு சிறந்த ஒரு அடிப்படையாகக் காணப்படும்.அதேபோன்று பெண்களில் இப்போது திருமணம் செய்வதற்கு முன்பு பொருளாதார சுதந்திரத்தை தமக்கென்று உருவாக்கிக்கொள்ள நாடுகிறார்கள் இதனூடாக அவர்களுக்கு  ஏற்படுகின்ற ஒடுக்குமுறைகளுக்கு எதிராக நிற்கவும் தங்களுக்கு சிறந்த முடிவுகளை எடுத்துக் கொள்ளவும்  இது நம்பிக்கையான ஒரு பலத்தை அவர்களுக்கு அளிக்கின்றது.அவ்வாறு சமூகத்தை இவ்வாறான அச்சுறுத்தலில் இருந்து விடுவிப்பதற்கு எடுக்க வேண்டிய பிரதான நடவடிக்கை கல்வி ஆகும் . சிறந்த சமூக நடைமுறைகள் மற்றும் பாலின சம உரிமைகள் குறித்து நமது புதிய தலைமுறையினருக்கு நாம் கற்பிக்கும் போது இது போன்ற அச்சுறுத்தல்களை நாம் சரியாக அழிக்கமுடியும் எனவே கல்வியை பிரதான ஆயுதமாக பயன்படுத்துவதால் மட்டுமே சமூகத்திலுள்ள இக்களையை பிடுங்க முடியும்.

ஆகவே ஒரு நாட்டின் ஒட்டுமொத்த நல்வாழ்வு மற்றும் வளர்ச்சிக்கு பாலின சமத்துவத்தில் அதிக மதிப்பெண் பெறுவது மிக முக்கியமான அம்சமாகும்.பாலின சமத்துவத்தில் குறைந்த ஏற்றத்தாழ்வுகள் கொண்ட நாடுகள் நிறைய முன்னேறியுள்ளன. எனவே சமூகத்தில் பெண்கள் மற்றும் ஆண்கள் ஒரே நிலைப்பாட்டைக் கொண்டு சமமாக பங்கேற்கும் போது சமூகம் பிரத்தியோகமாக முன்னேறி ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டு முன்னோக்கிச் செல்லும்.

Writer’s Thoughts

Written By Rtr. Farhath Manas

Related Posts

Leave a Reply

410 Gone

410 Gone


openresty