Follow Us On

Pandemic Diaries – Rotaract Club of Chunnakam

6.
சுன்னாகம் றோட்டறக்ட் கழகத்தின் ஆதாயம் செயற்திட்டம்

அன்புள்ள டைரி,  இது ‘சர்வதேச நோய் பரவல் டைரிஸ்’ வலைப்பதிவு தொடருக்கான ஆறாவது பதிவாகும். சுன்னாகம் றோட்டறக்ட் கழகத்தினால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு செய்த செயற்திட்டத்தை நோக்குவோம்..

ஆதாயம் செயற்திட்டம் சுன்னாகம் றோட்டறக்ட் கழகத்தினால் கொவிட் 19 சூழ்நிலையில் தனது வாழ்வாதாரத்தினை இழந்த ஒரு குடும்பத்திற்கான தொழில் வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்கும் செயதிட்டமாக அமைந்திருந்தது.

தெல்லிப்பழை பிரதேசத்தில் உள்ள கூலித் தொழிலாளி ஒருவர் கொவிட் 19 சூழலில் தனது நாளாந்த தொழில் வாய்ப்பினை இழந்திருந்த நிலையில் அவரது குடும்பம் வாழ்வாதாரம் மற்றும் பிள்ளைகளின் கல்வி செலவுகளை ஈடு செய்வதில் பெரும் சிரமத்தினை எதிர்நோக்கி இருந்த வேளை அவரது குடும்ப நிலைமையை கருத்திற் கொண்டு இச் செயற்றிட்டம் சுன்னாகம் றோட்டறக்ட் கழகத்தினால்; முன்னெடுக்கப்பட்டது.

வேலைவாய்ப்புகள் இல்லாத நிலையில் இருந்த அவருடைய குடும்பத்திற்கு சுன்னாகம் றோட்டறக்ட் கழகம் மூலமாக ஒரு வணிக நிலையம் ஒன்றினை அமைத்துக் கொடுத்து விற்பனைக்கு தேவையான பொருட்களையும் வழங்கி அவருக்கான தொழில் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றனர்.

பளை வீமம்காமம் கிராமத்தில்  சுமார் 100 குடும்பங்கள் உள்ளது. இந்த பகுதியில் இரண்டு வணின நிறுவனங்கள் மட்டுமே உள்ளன. மேற்படி வணிக நிலையமானது அவருடைய வீட்டிற்கு அருகில் உள்ள அவர்களுடைய கழக உறுப்பினர் ஒருவருடைய காணிப்பரப்பில் அவர்களால் அமைத்துக் கொடுக்கப்பட்டது. அத்துடன் கழக உறுப்பினர் ஒருவரின் நிதி அனுசரணையுடன்  கட்டட வேலைகள் மற்றும் விற்பனை பொருட்கள் என்பன கொள்வனவு செய்யப்பட்டு மேற்படிப் பயனாளிக்கு கையளிக்கப்பட்டது.

வணிக நிலையத்தின் ஆரம்ப நிலை வேலைகளுக்குப் பின்னர்  திறப்பு விழாவை நடத்தினார்கள். 03.09.2020 அன்று திறப்பு விழா நடைபெற்றபோது அவர்கள் வணிக நிலையத்கை அவரிடம் ஒப்படைத்தனர். வடக்கு வருகையின் போது எங்கள் டி.ஆர்.ஆர் மற்றும் மாவட்ட வழிநடத்தல் குழுவின் இயக்குநர்கள் அனைவரும் அவர்களின் வணிக நிலையத்தினை பார்வையிடச் சென்றிருந்தனர்;, மேலும் எங்கள் மதிப்பிற்க்குரிய  பிடிஜி.றோட்டேரியன்.போல் ஹாரிஸ் பெல்லொவ்.கௌரிராஜன் அவர்களும் வணிக நிலையத்தினை பார்வையிடச் சென்றிருந்தார்.  அவர்கள் அனைவரும் தொழிலாளியுடன் கலந்துரையாடினர் மற்றும் வணிகம் தொடர்பான சில  கருத்துகளை வழங்கினர். இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த எங்களுக்கு ரோட்டரியன் ரோஹந்த அவர்களும் உதவியுள்ளார்கள் .

இதன் மூலம் அவரது குடும்பத்தின் பொருளாதார நிலைமை மேம்பட்டிருப்பதுடன் தொடர்ச்சியான ஒரு தொழில் வாய்ப்பும் அவர்களின்  கழகத்தினால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மிட் டவும் றோட்டறக்ட் கழகமாகிய நாங்கள், இந்த செயதிட்டத்திக்காக, சுன்னாகம் றோட்டறக்ட் கழகத்திற்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கின்றோம்.

வாழ்த்துக்கள்

Written By Krish
Previous PostNext Post

Related Posts

Leave a Reply