Follow Us On

தற்கொலை தடுப்புக்காக ஒன்றிணைந்து செயலாற்றுவோம்

தற்கோலை தடுப்பு என்பது இன்று ஒரு உலகலாவிய சவாலாக உள்ளது . ஒவ்வொரு ஆண்டும் தற்கொலை என்ற காரணத்தின் மூலம் உலகில் மரணித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன . ஒவ்வொரு வயதினரும் இதில் அடங்குகின்றனர் . ஒவ்வொரு 40 வினாடிகளுக்கு ஒருவர் தற்கொலை செய்துகொள்வதாக புள்ளிவிபரம் குறிக்கின்றது . ஒவ்வொரு தற்கொலைக்கு பிறகும் சுமார் 135 பேர் வருத்தமடைவதாகவும் கூறப்படுகிறது . குழந்தைகள் , நண்பர்கள் , பெற்றோர்கள் , சக ஊழியர்கள் , உறவினர்கள் அவ்வாறு வருந்துபவர்கள் ஆவர்.

தற்கொலை நடத்தை என்பது ஒருவரை தற்கொலைக்கு தூண்டுகின்ற காரணியாக அமைகின்றது . தற்கொலை எண்ணம் , தற்கொலை முயற்சி என்பன தற்கொலை செய்வதற்கான முதன்மை காரியாகும் . ஒவ்வொரு தற்கொலை நிகழும்போது மேலும் 25 பேர் தற்கொலைக்கு முயல்கின்றனர் . மேலும் பலர் தீவிர தற்கொலை எண்ணம் கொண்டவர்களாக இருக்கின்றனர் என உலக தற்கொலை தடுப்பு மையம் (WSPD 2019) குறிப்பிடுகிறது .

தற்கொலைகளை தடுத்து நிறுத்துவது என்பது பெரும்பாலும் சாத்தியமான விடயம் ஒன்றாகவே கருதப்படுகிறது . நாம் ஒருவரும் இவ்வாறு தற்கொலைகளை தடுத்து நிறுத்துவதற்கு முக்கியமானதொரு பங்குதாரராக இருக்கவேண்டியதன் அவசியத்தை சமூக ரீதியாக வலியுறுத்தப்பட்டுள்ளது . இதன் மூலம் எம்மால் ஒரு வித்தியாசத்தை உருவாக்க முடியும் . சமூகத்தின் ஒரு உறுப்பினராக ஒரு நண்பராக ஒரு பெற்றோராக ஒரு அயலவராக தற்கொலை நடத்தைகளை தடுக்க பல செயற்பாடுகளை முன்னெடுக்கலாம் . உலக தற்கொலை தடுப்பு தினத்தில் அதற்கான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தலாம் .

Talk to someone. Ask for help to fight another day.

தற்கொலைக்கான காரணங்கள் அதற்கான எச்சரிக்கைகள் அறிகுறி தொடர்பாக சமூக வலைத்தளங்கள் ஊடாக மக்களை இலகுவில் சென்றடைய கூடிய வகையில் விழிப்புணர்வு கருத்துகளை பகுந்து அளிக்க வேண்டும் . சமூகத்தில் துன்பத்தில் இருப்பவர்களுக்கு அன்பும் அக்கரையும் இரக்கமும் காட்டப்படும்போது தற்கொலை முயற்சியை மாற்றி அமைக்க முடியும் . ஒருவருக்கு காணப்படும் மனநல பிரச்னை தொடர்பாக ஆராய்ந்து அவற்றை வெற்றிகொள்ள உபாயங்களை சொல்லி கொடுப்பதன் மூலம் தற்கொலைகளை தடுக்கலாம் .

தற்கொலைகளை தடுத்து நிறுத்ததுவதற்கான வேலையின் போது சமூகத்தில் பல நிலையான நன்மைகள் கிடைக்கின்றது . இதற்கு நாம் ஒன்றிணைந்து செயற்படுவது அவசியமாகும் . தற்கொலைகளை தடுப்பதற்கு பலரின் முயற்சிகள் தேவை . குடும்பம் , நண்பர்கள் , சக ஊழியர்கள் , மத தலைவர்கள் , அரசியல் அதிகாரிகள் , உழவியலாளர்கள் மற்றும் அரசு என்பன இனைந்து செயலாற்றும் போது தற்கொலை தடுப்பு மேலும் வழுவடையும் .

தன்னம்பிக்கையை கட்டியெழுப்புதல் , புரிந்துணர்வும் விட்டுக்கொடுப்பும் , நேரான சிந்தனைகள் போன்ற கருப்பொருற்களை மையமாக கொண்டு விழிப்புணர்வுகளை முன்வைக்கும்போது பலரின் தற்கொலை தடுப்பில் நாம் பங்களிக்க முடியும் . உள்நாட்டு வெளிநாட்டு உதவிகளை பெற்றுக்கொண்டு இந்த சமூகத்தில் தற்கொலை நடத்தை முன்வைக்கும் சவால்களை நாம் கூட்டாக எதிர்கொள்ள முடியும்.

Written by Paranitharan Ravindran

Related Posts

Leave a Reply