பத்து மாதம் சுமந்தாயே,
உயிர் துடித்து என்னை பெத்தாயே,
உதிரத்தை உணவாய் தந்தாயே,
அடைகாக்கும் பறவை போல என்னை சதா காலம் காத்தாயே,
தன் பசி மறைத்து என் பசி தீர்த்தாயே
வறுமை நெருப்பு நெருங்க விடாமல் நீ எரிந்தாயே
அதனால் தான் என்னவோ நீ பொன்னாய் மின்னுறாயோ
ஓராயிரம் உறவுகள் யான் அறிந்தாலும், உன் உள்ளங்கையின் ஒற்றை ரேகாயாய் என்றும் இருந்திட ஆசை
தீரா ஆசை !!
By: Rtr. P. Krishanth | Email: krishanthprementhiraraja@yahoo.com